/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி வீரர்கள் பெல்காம் பயணம்

ADDED : அக் 09, 2025 02:01 AM

புதுச்சேரி: தேசிய அளவிலான அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற புதுச்சேரியை சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் பெல்காம் புறப்பட்டனர்.
கர்நாடக மாநிலம், பெல்காம் மாவட்டத்தில் 38வது தேசிய ஆடவர் மற்றும் மகளிர்களுக்கானஅட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டி நாளை 10ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.
28 மாநிலங்கள் பங்கேற்கும் இப்போட்டியில், புதுச்சேரி அட்டிய பட்டியா அசோசியேஷன் சார்பில், வெங்கட்ராமன் தலைமையில் ஆடவர் அணியில் சஞ்சய், தினேஷ்குமார், தட்சசுபப்பிரியன், ஹேமச்சந்திரன், சஞ்சய்குமார், சந்தோஷ், அர்ஜூன், சவுந்தரராஜன், ராஜகணபதி, ஷர்வின், குணாலன், வெங்கடேஷ் பிரசாத், யுவராஜ், விஷ்ணு, கோமளா தலைமையில் மகளிர் அணியில் சந்தியா, கிரிஜா, தமிழ்செல்வி, மதுமிதா, வெண்மதி, மதுபாலா, மனிஷா, அபிநயா, கிருத்திகா, கிரிஷ்டினா, சங்கரி, மோனிகா, சந்தரவதனா, ராஜவேணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்விரு அணியினரும் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து ரயில் மூலம் பயிற்சியாளர்கள் இனியன், சக்திவேல், மேலாளர்கள் நந்தகுமாரி, சிவக்குமார் ஆகியோருடன் பெல்காமிற்கு புறப்பட்டு சென்றனர்.