ADDED : ஜூலை 13, 2026 02:31 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் 3வது சீசனின் 10வது போட்டியில் ரூபி ஒயிட் டவுடன் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீழ்த்தியது.
ஸ்ரீராம் கேபிடல் வழங்கும் பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 3வது சீசன் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று நடந்த 10வது போட்டியில் மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி மோதியது.
முதலில் பேட் செய்த ஒயிட் டவுன் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் ஆயுத் சர்மா, (3 சிக்சர், 6 பவுண்டரி) 65 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் ஒயிட் டவுன் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் எடுத்தது.
மாகே அணியை சேர்ந்த ேஷாபித் சவுத்ரி 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்களையும், தேஜ்வீர் சிங் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமறிங்கிய மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் ஸ்ரீகரண் (5 சிக்சர், 6 பவுண்டரி) 65 ரன்களும், கரண் கண்ணன் 40 ரன்களும் எடுத்தனர். போட்டியில் ஆட்டநாயகன் விருது 4 விக்கெட்கள் வீழ்த்திய ேஷாபித் சவுத்ரிக்கு வழங்கப்பட்டது.
இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள மாகே அணி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
