/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் 5ம் தேதி மகா கும்பாபிேஷகம்
/
கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் 5ம் தேதி மகா கும்பாபிேஷகம்
கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் 5ம் தேதி மகா கும்பாபிேஷகம்
கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் 5ம் தேதி மகா கும்பாபிேஷகம்
ADDED : மே 31, 2025 12:58 AM
புதுச்சேரி : சாரம், கெங்கைமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் வரும் 5ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி சாரத்தில் அமைந்துள்ள கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி, வரும் 5ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது. இதற்கான பூஜை நாளை 1ம் தேதி காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.
அதனையொட்டி, மகா கணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ரேஹார்கண ேஹாமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும், 2ம் தேதி காலை நவக்கிரக ேஹாமம், மிருச்சாங்கிரஹணம், பூர்ணாஹூதியும், மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, தீபாராதனை நடக்கிறது.
மறுநாள் 3ம் தேதி காலை மூர்த்தி ேஷாமம்ல ஸம்ஹீதா ேஹாமம், திசா ேஹாமம், சாந்தி ேஹாமம், பூர்ணாஹூதியை தொடர்ந்து, மாலை முதல்கால யாக பூஜை நடக்கிறது. 4ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், 5ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. 6ம் தேதி முதல் மண்டலாபிேஷகம் துவங்குகிறது.