/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் கோவிலில் மகா ருத்ராபிஷேகம்
/
பாகூர் கோவிலில் மகா ருத்ராபிஷேகம்
ADDED : நவ 02, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், மகா ருத்ராபிஷேகம் நேற்று நடந்தது.
பாகூரில் முதலாம் பரந்தக சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரம் மற்றும் சென்னை மணிமங்கலம் படப்பை புஜ்ஜிய ஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி நேற்று மகா ருத்ரபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, மாலை 5:00 மணிக்கு கோ - பூஜை, மாலை 6:00 மணிக்கு, மூலநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து, ஏகாதச ருத்ர பாராயணம், ருத்ர ேஹாமம், ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.