மகாவீர் நகர், சிட்டிசன் அவென்யூ சங்கம் ஆலோசனை கூட்டம்
மகாவீர் நகர், சிட்டிசன் அவென்யூ சங்கம் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 14, 2026 05:13 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை மகாவீர் நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் மற்றும் சிட்டிசன் அவன்யூ குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் சார்பில் குறை தீர்வு மற்றும் பகுதி மேம்பாட்டு கலந்தாய்வு கூட்டம் மகாவீர் நகர் பகுதியில் நடந்தது.
கூட்டத்திற்கு, தொகுதி எம்.எல்.ஏ., வும் அமைச்சருமான சிவக்கொழுந்து கலந்து கொண்டு மகாவீர் நகர் பகுதியில் செய்ய வேண்டிய பணிகளை குறித்து கேட்டறிந்தார்.
பின் அப்பகுதியில் ஏற்படுத்த வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அப்பகுதி மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சங்கங்களின் தலைவர்கள் பாண்டியன், திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.
