/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மகிளா காங்., ஆர்ப்பாட்டம்
/
ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மகிளா காங்., ஆர்ப்பாட்டம்
ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மகிளா காங்., ஆர்ப்பாட்டம்
ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மகிளா காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 12, 2025 01:48 AM

புதுச்சேரி: ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மிஷன் வீதியில் மகிளா காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போ து, அருகில் இருந்த பாரை முற்றுகையிட்டு பேனர்களை கிழித்து ஏறிந்ததால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு ரெஸ்டோ பார்களை அதிக அளவில் திறந்து, கலாச்சாரத்தை சீரழித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், மிஷின் வீதியி ல் உள்ள ரெஸ்டோ பாரில் கல்லுாரி மாணவன், ஊழியர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி குடியிருப்புகள் மத்தியில் அமைந்துள்ள ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மகிளா காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் இருந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மகிளா காங்., தலைவி நிஷா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு பேரணியாக சென்று, மிஷன் வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
அவர்களிடம் பெரியக்கடை போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திடீரென மகளிர் காங்., நிர்வாகிகள் அங்கிருந்த 2 ரெஸ்டோ பார்களை முற்றுகையிட்டு, அங்கிருந்த விளம்பர பேனர்களை கிழித்து எறிந்தனர்.
மேலும், ரெஸ்டோ பார் மீது செருப்பு வீசி மூட வலியுறுத்தினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்க ளை தடுத்து நிறுத்தியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ரெஸ்டோ பாருக்கு ஆதரவாக அரசும், போலீசாரும் செயல்பட்டு வருகின்றனர். வரும் தேர்தலில் காங்., அரசு அமைந்தால் உடனடியாக ரெஸ்டோ பார்களை மூடுவோம் என்றார்.
பின், மகிளா காங்., தலைவி நிஷா கூறுகையில், ரெஸ்டோ பார்களை உடனே மூட நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும். ரெஸ்டோ பார் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே அவர்களின் பெயர்களை வெளியிடுவோம் என்றார்.