தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாகே கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தவர் சாவு

மாகே கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தவர் சாவு

மாகே கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தவர் சாவு


ADDED : நவ 18, 2026 07:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 07:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கேரளம் வடகரை சாந்தி ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன்,56; இவர் மாகே பகுதியில் உள்ள அஹதி கெஸ்ட் ஹவுசில் மேனேஜராக வேலை செய்கிறார்.

அதில், கடந்த 13ம் தேதி பாலக்காட்டை சேர்ந்த பைசல், 41; என்பவர் அறை எடுத்து தங்கியிருந்தார். அவர் நேற்று (நவ.,17) வரை அறை வாடகையை தரவில்லை.

இதையடுத்து அவரது மொபைல் போனிற்கு மதுசூதனன் தொடர்பு கொண்ட போது பைசல் எடுக்கவில்லை. இதையடுத்து அவரது அறை கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது, பைசல் கட்டிலில் மயங்கி கிடந்தார்.

தொடர்ந்து மாகே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது அவர், இறந்து கிடந்தது தெரிய வந்தது. புகாரின் பேரில், ஏனாம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us