/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவீன தொழில்நுட்பத்தில் மணிலா நடவு பயிற்சி
/
நவீன தொழில்நுட்பத்தில் மணிலா நடவு பயிற்சி
ADDED : ஜன 03, 2026 04:41 AM

வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வில்லியனுார் ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், உறுவையாறு கிராமத்தில் நிலக்கடலை பயிர்செய்யும் விவசாயிகளுக்கு, மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் நடவு செய்வது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு வில்லியனுார் கோட்ட துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். காரைக்கால் பண்டித ஜவர்கலால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியர் நாராயணன், நிலக்கடலை நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் விதைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
நிகழ்ச்சியில் வில்லியனுார், திருக்காஞ்சி மற்றும் ஒதியம்பட்டு ஆகிய உழவர் உதவியகத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். திருக்காஞ்சி உழவர் உதவியக வேளாண் அலுவலர் தினகரன் நன்றி கூறினார்.

