sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபைக்குள் முகமூடி ரவுடிகள் உலா

சட்டசபைக்குள் முகமூடி ரவுடிகள் உலா

சட்டசபைக்குள் முகமூடி ரவுடிகள் உலா


ADDED : ஜன 26, 2025 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 04:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஒரு மாநில நிர்வாகத்தின் ஒட்டுமொத்த இதயம் சட்டசபை. உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த இடமாகவும் திகழும். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

இத்தகைய சட்டசபைக்குள் சர்வ சாதாரணமாக யாரும் நுழைந்து விட முடியாது. புதுச்சேரி சட்டசபையின் பாதுகாப்பை பலப்படுத்த வளாகத்தை சுற்றிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர, சட்டசபைக்குள் வரும் அனைவரையும் சபை காவலர்கள் பரிசோதித்து, யாரை சந்திக்க செல்கின்றனர் என்ற விபரங்களை கேட்டு, கையெழுத்து வாங்கிய பின்னரே அனுமதிக்கின்றனர்.

இத்தகைய கட்டுப்பாடுகள் நிறைந்த சட்டசபைக்குள், முகமூடியுடன் (மாஸ்க் அணிந்து) வரும் ரவுடிகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர். சட்டசபை காவலர்களுக்கு, முகமூடி அணிந்த நபர்கள் ரவுடிகளா, பொதுமக்களா என தெரியவது இல்லை. அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகத்திற்கு செல்வதாக கூறினால் உடனே அனுமதிக்கின்றனர்.

இதனை பயன்படுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடிகள் இருவர் முகமூடி அணிந்து கொண்டு சர்வ சாதாரணமாக சட்டசபைக்குள் சென்றனர். 30 நிமிடங்கள் கழித்து சட்டசபையை விட்டு வெளியேறி புறப்பட்டு சென்றனர். சட்டசபைக்குள் ரவுடிகள் எதற்காக வந்தனர், யாரை சந்தித்தனர் என்ற விபரம் தெரியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us