ADDED : அக் 21, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி கொத்தனார் இறந்தார்.
முருங்கப்பாக்கம், அரவிந்தர் நகர், 8 வது தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வம், 58; கொத்தனார். இவர் வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியில் உள்ள குமரன் என்பவரது வீட்டில் கொத்தனார் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை 10:00 மணியளவில், முதல் மாடியில் சாரம் கட்டுவதற்காக செந்தமிழ்செல்வம், மரம் எடுத்தபோது வீட்டின் மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கைப்பட்டு துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் செந்தமிழ்செல்வத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து, இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.