நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் வயிற்று வலியால் அவதிப்பட்ட கொத்தனார் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால் திருப்பட்டினம் கீழவாஞ்சூர் மேலதெரு பகுதியை சேர்ந்த சசிகுமார், 51; கொத்தனார். இவருக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சசிக்குமாருக்கு தாங்கமுடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த அவர் மனைவி புடைவையில் துாக்குப்போட்டுக் கொண்டார். உடன் உறவினர்கள் சசிகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சசிக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.