ADDED : ஜூலை 27, 2026 02:04 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார், சுல்தான்பேட், வளர்பிறை நகரை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான், 55; ஆட்டு இறைச்சி வியாபாரி.
இவர் நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டரில் மயிலம் பகுதிக்கு சென்று, ஆடுகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
காட்டேரிக்குப்பம் - கூனிமுடக்கு சாலை வளைவில் திரும்பிய போது, ஸ்கூட்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
தலையில் படுகாயமடைந்த முஜிபுர் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து வில்லியனுார் போக்கு வரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
