/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்துறை அமைச்சர் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம்
/
உள்துறை அமைச்சர் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம்
உள்துறை அமைச்சர் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம்
உள்துறை அமைச்சர் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம்
ADDED : ஜூன் 06, 2025 06:45 AM

புதுச்சேரி; உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், மூன்று புதிய சட்டங்களின் செயல்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், டி.ஜி.பி., ஷாலினி சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின், அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 புதிய சட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தின் செயல்பாடுகள் குறித்து கவர்னர், உள்துறை அமைச்சர், தலைமை செயலர், டி.ஜி.பி., சட்டத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்போதும் அந்தந்த மாநில மொழிகளில் இருக்க வேண்டும்.
புதுச்சேரியில் தமிழிலும், மாகே, ஏனாமில் அந்தந்த மொழிகளிலும் பதியப்பட வேண்டும். ஒவ்வொரு வாரமும் காவல்துறையின் தலைவரும், 15 நாட்களுக்கு ஒருமுறை உள்துறை அமைச்சரும், மாதம் ஒருமுறை கவர்னரும் புதிய சட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு குறித்த நடவடிக்கைகள், காவல்துறையில் எடுக்க வேண்டிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் மீது வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. தவளக்குப்பம் காவல் நிலையம் சம்மபவத்தில் சம்மந்தப்பட்ட போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் மன்றத்தில் நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தொடர் வெடிகுண்டு மிரட்டல் குறித்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது சம்மந்தமாக மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம். கிடைத்தவுடன் உரிய தீர்வு காணப்படும்' என்றார்.