/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : மார் 06, 2024 03:20 AM

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். பள்ளியின் பொறுப்பாசிரியர் கனவா சையது தலைமை தாங்கினார். ஆசிரியர் கலைச்செல்வி தொகுத்து வழங்கினார்.
திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், பேசுகையில், 'அரசு பணியிடங்களுக்கான தேர்வுகள் அனைத்திற்கும் 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள கல்வியே அடிப்படையாக உள்ளது.
அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்றால் அடிப்படைக் கல்வியை நன்றாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் வருங்காலத்தில் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும். போதைப் பொருள்கள் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல், நம்முடைய இலக்கை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்க வேண்டும்' என்றார்.
காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர்கள் மகாலட்சுமி, அக்பர் ராஜ், ராஜசேகர், கலையரசி, சுபாஷினி, அருண்பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

