/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நள்ளிரவில் வழிப்பறி : 3 பேருக்கு வலை
/
நள்ளிரவில் வழிப்பறி : 3 பேருக்கு வலை
ADDED : ஜூலை 04, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் அருகே பைக்கில் சென்ற டிரைவரிடம் வழிபறி செய்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த கீழுர் காமராஜர் நகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தணிகாசலம், 42; டிரைவர். இவர், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் புதுச்சேரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், கீழுர் பாலம் அருகில் வழிமறித்து தணிகாசலத்திடம் இருந்த மொபைல் போன், 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். தணிகாசலம் மங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.