/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நோணாங்குப்பத்திற்கு மினி பஸ்கள் இயக்கம்
/
நோணாங்குப்பத்திற்கு மினி பஸ்கள் இயக்கம்
ADDED : டிச 06, 2024 05:11 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து நோணாங்குப்பத்திற்கு, 2 பி.ஆர்.டி.சி., மினி பஸ்கள் இயக்கப்பட்டன.
தவளக்குப்பம் அருகில் உள்ள இடையார்பாளையம் பாலம் நேற்று முன்தினம் இரவு உள்வாங்கியது. இதனால் புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இந்த சாலையில் டூ-வீலர்களை மட்டும் அருகில் உள்ள பழைய பாலம் வழியாக செல்ல அனுமதிக்கின்றனர்.
இதனால் புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி செல்லும் பஸ்கள் அனைத்தும் திருக்காஞ்சி, தவளக்குப்பம் வழியாக சுற்றி செல்கின்றன. மாற்றுப்பாதையில் செல்வதால், முதலியார்பேட்டை, மரப்பாலம், அரியாங்குப்பம், நோணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ்கள் இல்லை.
இதனால் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த பகுதிகளுக்கு செல்ல ஆட்டோக்களில், குறைந்தபட்சமாக ரூ.300 வரை, கட்டணம் வசூலித்தனர்.
இது குறித்து முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் போக்குவரத்து ஆணையர் சிவக்குமாரை தொடர்பு கொண்டு, புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து, மரப்பாலம், நோணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மினி பஸ் இயக்க கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில்,இரண்டு பி.ஆர்.டி.சி., மினி பஸ்கள் நோணாங்குப்பம் பாலம் வரை நேற்று இயக்கப்பட்டன. இதையடுத்துஇரண்டு தனியார் பஸ்களும், அவ்வழியாக இயக்கப்பட்டது.