ADDED : செப் 18, 2024 10:02 PM

அ நிறம் | அளவு
பாகூர்: முள்ளோடையில் தடுப்பு கட்டையில் மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.
கிருஷ்கிரியில் இருந்து நேற்று அதிகாலை புதுச்சேரி வழியாக பூக்களை ஏற்றிக்கொண்டு, மகேந்திரா மினி லாரி கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தது. புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை சந்திப்பு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடி சாலையில் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில், டிரைவர் மற்றும் உதவியாளர் லேசான காயமடைந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
