தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடற்கரை மணலில் சிக்கிய மினி வேனால் பரபரப்பு

கடற்கரை மணலில் சிக்கிய மினி வேனால் பரபரப்பு

கடற்கரை மணலில் சிக்கிய மினி வேனால் பரபரப்பு


ADDED : நவ 13, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டி மெரினா கடற்கரை மணலில் சிக்கிய மினி வேனை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் சுனில், 30; டிரைவர். இவர் இன்று (நவ.,13) மகேந்திரா லோடு கேரியர் மினி வேனில் (ஏ.பி., 39 யூ.எப்., 7915) மருந்து பொருட்களை ஏற்றி வந்து, புதுச்சேரியில் இறக்கிவிட்டு, மாலை 5:00 மணியளவில் மினி வேனை பாண்டி மெரினா கடற்கரைப் பகுதியில் நிறுத்த முயன்றார். அப்போது வாகனம் எதிர்பாராத விதமாக மணலில் சிக்கிக் கொண்டது.

இது குறித்து புதுச்சேரி தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, முன்னணி தீயணைப்பாளர் பழனி ஆகியோர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மினவேனை மீட்டு பத்திரமாக சாலைக்குக் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us