/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.3 ஆயிரம் கோடிக்கு உட்கட்டமைப்பு பணிகள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
/
ரூ.3 ஆயிரம் கோடிக்கு உட்கட்டமைப்பு பணிகள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
ரூ.3 ஆயிரம் கோடிக்கு உட்கட்டமைப்பு பணிகள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
ரூ.3 ஆயிரம் கோடிக்கு உட்கட்டமைப்பு பணிகள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
ADDED : அக் 14, 2025 03:16 AM
புதுச்சேரி : தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், புதுச்சேரியில் ரூ.3 ஆயிரம் கோடியில் பொதுப்பணித்துறை மூலம் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.
உயர்மட்ட மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது:
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கியுள்ளார். இந்த மேம்பாலம் கட்ட பலமுறை அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது முழுமையாக 100 சதவீத மத்திய அரசு மானியத்துடன் இந்த மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். புதுச்சேரியன் போக்குவரத்து நெரிசலை இந்த மேம்பாலம் குறைக்கும். இனிவரும் 30 ஆண்டு கால பிரச்னைக்கு இந்த பாலம் தீர்வாக அமையும்.
ஆட்சி பொறுப்பேற்றவுடன், முதல்வர் ரங்கசாமி மூன்று முறை கடிதம் எழுதினார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, காலக்கெடு நிர்ணயித்து பணிகளை துவங்கி வைத்துள்ளார். மாநில, மத்திய அரசு சேர்ந்து இரட்டை இன்ஜின் ஆட்சி செயல்படுவதால் கனவு கண்ட திட்டங்கள் எல்லாம் புதுச்சேரி அரசு நிறைவேறி வருகிறது.
புதுச்சேரியன் பல திட்டங்களுக்கு மத்திய அரசு 1,300 கோடி ஒதுக்கியுள்ளது. கடந்த காங்., ஆட்சியில் ரூ.1,800 கோடிக்கு பொதுப்பணித்துறை பணிகள் நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் பணிகளை செய்து சாதனை புரிந்துள்ளது என்றார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.