/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வித்துறையில் 1,031 பேர் நியமனம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
/
கல்வித்துறையில் 1,031 பேர் நியமனம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
கல்வித்துறையில் 1,031 பேர் நியமனம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
கல்வித்துறையில் 1,031 பேர் நியமனம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ADDED : மார் 27, 2025 03:53 AM
புதுச்சேரி: பள்ளி கல்வித் துறையில் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
இந்த கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச திட்டத்தின் கீழ் சீருடைய பொருட்கள், உடற்பயிற்சி குறிப்பு புத்தகங்கள், காலணி, பள்ளிபைகள் வாங்கப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் பாதுகாப்பினை மேம்படுத்த 126 அரசு பள்ளிகளில் தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவப்படும். நீட் எழுத விரும்பும் மாணவர்களுக்கான புதுச்சேரி பிராந்தியத்தில் நான்கு சிறப்பு பயிற்சி வகுப்பு மையம் ஏற்படுத்தப்படும்.
தொழில் கல்வியை மேம்படுத்த 155 திறன் தொழில் கல்வி படிப்புகள் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும். திறன் தொழிற்கல்வி ஆய்வகம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
அடுத்த மாதம் முதல் அனைத்து வேலை நாட்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் வகையில் மாலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
சிறுதானிய உணவு
அதன்படி சிறுதானிய பிஸ்கட், சிறுதானிய மிட்டாய், எள் மிட்டாய், நில கடலை மிட்டாய், பொட்டுக்கடலை மிட்டாய் அல்லது கொண்ட கடலை மிட்டாய் வழங்கப்படும். காரைக்கால் திருநள்ளாரில் நவீன மைய சமையல் கூடம் அமைக்கப்படும் அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்ய கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பு கல்வி பயிற்றுவிக்க சிறப்பு பாடத்திட்டம் வகுக்கப்படும்.
ஆசிரியர் பணியிடம்
பட்டதாரி ஆசிரியர்கள் (சிறப்பு கல்வி) 126 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 180 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.
நேரடி நியமனம்
190 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், 80 நுண்கலை ஆசிரியர்கள், 50 நிகழ்கலை ஆசிரியர்கள், 45 பள்ளி நுாலகர்கள், 36 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், 110 ரொட்டி பால் வழங்கும் ஊழியர்கள், 102 கண்டக்டர்ஸ், 102 சிறப்பு ஆசிரியர்கள் மாற்றுதிறனாளி மாணவர்களுக்காக நிரப்பப்படும்.
பதவி உயர்வு
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 82 பேருக்கு விரிவுரையாளர்களாகவும், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 152 பேருக்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும். 26 ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும்.