/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்து அரசு துறைகளுக்கும் இடமாறுதல் கொள்கை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
/
அனைத்து அரசு துறைகளுக்கும் இடமாறுதல் கொள்கை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
அனைத்து அரசு துறைகளுக்கும் இடமாறுதல் கொள்கை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
அனைத்து அரசு துறைகளுக்கும் இடமாறுதல் கொள்கை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ADDED : மார் 19, 2025 06:32 AM
புதுச்சேரி: சட்டசபையில் கேள்வி நேர விவாதத்தின்போது, எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், லட்சுமிகாந்தன் ஆகியோர் கிராமப்புறங்களில் மின் துறை ஊழியர் பற்றாக்குறை குறித்து சராமரியாக கேள்வி எழுப்பினர்.
மின் ஊழியர் பற்றாக்குறையால், மின் தடை ஏற்பட்டால், சரி செய்யவே பல மணி நேரம் ஆகிறது. புதிதாக மின் துறை அதிகாரிகள், ஊழியர்களை நியமித்தாலும் யாரும் கிராமப்புறங்களில் பணியாற்ற வருவதில்லை என குற்றம்சாட்டினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம்: இது உண்மை தான். இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஊழியர்களை கிராமப்புறங்களுக்கு இடமாற்றம் செய்தால் அவர்களுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.,க்கள் தான் முன்னாடி வந்து சிபாரிசு கேட்கின்றனர். இடமாற்ற பரிந்துரைக்கு வருவதை எம்.எல்.ஏ.,க்கள் நிறுத்த வேண்டும்.
வைத்தியநாதன்: மின் துறையில் இடமாற்றம் செய்வதில்லை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் பாரப்பட்சம் உள்ளது. 10 ஆண்டுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களை மாற்றுவதில்லை. ஆனால் நன்றாக பணியாற்றும் ஊழியர்களை 2 ஆண்டுகளில் இடமாறுதல் செய்யப்படுகின்றது. இது ஏன். மின் துறையில் பொதுவான இடமாற்றல் கொள்கையை கொண்டு வாருங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: நீண்டகாலமாக இடமாற்றல் கொள்கை நம்மிடம் இல்லை. தற்போது கல்வித்துறையில் இடமாறுதல் கொள்கையை அமல்படுத்தியுள்ளோம். இதுபோல படிப்படியாக அனைத்து துறையிலும் இடமாறுதல் கொள்கை அமல்படுத்துவோம்.
லட்சுமிகாந்தன்(என்.ஆர்.காங்): கோர்க்கோடு மின் நிலையத்தில் ஒரு தொழில்நுட்ப ஊழியர் மட்டும்தான் பணியாற்றுகிறார். அவரே அனைத்து பணிகளையும் செய்கிறார்.
இங்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் 10 கிராமங்களில் இருளில் மூழ்கிவிடுகிறது.
முதல்வர் ரங்கசாமி: நீண்டகாலமாக மின்துறையில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இப்போது தான் கஷ்டப்பட்டு முயற்சி எடுத்து மின்துறையில் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். அனைத்தும் சரியாகும்.
அமைச்சர் நமச்சிவாயம்: கடந்த 12ம் தேதி 73 இளநிலை பொறியாளர், 177 கட்டுமான பணியாளர் தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலை பொறியாளர் தேர்வுக்கு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்படுவோர் வீட்டு வாடகைப்படி இல்லாத இடங்களிலும் பணிபுரிய வேண்டும் என விதிமுறை சேர்க்கப்படும்.