/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து விவகாரம் உரிய நேரத்தில் மத்திய அரசு அறிவிக்கும் அமைச்சர் நமச்சிவாயம் நம்பிக்கை

ADDED : டிச 28, 2025 05:42 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து அறிவிப்பை மத்திய அரசு உரிய நேரத்தில் அறிவிக்கும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராயிடம், அமைச்சர் நமச்சிவாயம், மனு அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் 35 திட்டங்கள் குறித்து மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆய்வு செய்தார். அப்போது, நிலுவையில் உள்ள திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரசின் ஒருசில கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்துள்ளேன். குறிப்பாக புதுச்சேரிக்கு இரண்டாவது ரிசர்வ் பட்டாலியன் போலீசார் பணி நியமனம் தொடர்பாக ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ள கோப்பிற்கு ஒப்புதல் கேட்டுள்ளோம்.
மாநிலத்தில் 88 உதவி சப் இன்ஸ்பெக்டர்கள், 100 தலைமை காவலர்கள் கூடுதலாக எடுப்பதற்கான உத்தரவையும், உள்துறையின் நிர்வாகத்தை நவீன மயமாக்குவதற்கு ரூ.2 கோடியும் கேட்டுள்ளோம். அவரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
மாநில அந்தஸ்து குறித்து மத்திய இணை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, மாநில அந்தஸ்து தொடர்பான கோப்பு மத்திய அரசுக்கு ஏற்கெனவே சென்றுள்ளது.அதனை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதனால் அது குறித்து வலியுறுத்தவில்லை. இருப்பினும், மாநில அந்தஸ்து அறிவிப்பை மத்திய அரசு உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றார்.