/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் பிறந்தநாளையொட்டி அமைச்சர் தங்கத்தேர் வழிபாடு
/
முதல்வர் பிறந்தநாளையொட்டி அமைச்சர் தங்கத்தேர் வழிபாடு
முதல்வர் பிறந்தநாளையொட்டி அமைச்சர் தங்கத்தேர் வழிபாடு
முதல்வர் பிறந்தநாளையொட்டி அமைச்சர் தங்கத்தேர் வழிபாடு
ADDED : ஆக 05, 2025 01:47 AM

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை யொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை யொட்டி, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் நிர்வாகிகள் தங்கத்தேரை இழுத்து கோவிலுக்குள் சுற்றி வந்தனர்.
பின், மணக்குள விநாயகரை வழிப்பட்ட நிர்வாகிகள், பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு, சிவக்கொழுந்து, என்.ஆர்., காங்., பொது செயலாளர் ஜெயபால், அரசு கொறடா ஆறுமுகம் எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமி காந்தன், மணக்குள விநாயகர் கல்லுாரி இயக்குனர் நாராயணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ராஜ்பவன் தொகுதியில் முதல்வர் பிறந்தநாள் விழா புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 75வது பவளவிழா பிறந்தநாளையொட்டி, ராஜ்பவன் தொகுதியில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் என்.ஆர்., காங்., நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தொடர்ந்து, லப்போர்த் வீதியில் உள்ள ேஹாஸ்பிஸ் மடத்தில், முதல்வர் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டதோடு, அவர் நலமோடு வாழ பிராத்னை செய்யப்பட்டு, முதியோருக்கு உணவு வழங்கப்பட்டது.