தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வ.உ.சி., நினைவு நாள் அமைச்சர்கள் மரியாதை

வ.உ.சி., நினைவு நாள் அமைச்சர்கள் மரியாதை

வ.உ.சி., நினைவு நாள் அமைச்சர்கள் மரியாதை


ADDED : நவ 18, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் வ.உ.சிதம்பம் நினைவு நாள் இன்று (நவ.,18) அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, பாரதிப் பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் ராஜவேலு, ராஜசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், மோகன்தாஸ், அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காங்., சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் ஆகியோர் வ.உ.சிதம்பரம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜ., சார்பில், மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அமைச்சர் ராஜசேகரன், மீனாட்சிசுந்தரம் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன், மூத்த நிர்வாகி இளங்கோவன், மாநிலச் செயலாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us