UPDATED : நவ 18, 2026 11:12 PM
ADDED : நவ 18, 2026 11:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த், சென்னை எழும்பூர் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி கோர்ட்டின் தலைமை நீதிபதி ஆனந்த். இவர், சென்னை எழும்பூர் சிறப்பு கோர்ட் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதுச்சேரி தலைமை நீதிபதியாக, திருப்பத்துார் மாவட்ட தலைமை நீதிபதி செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தீப்தி அறிவுநிதி பிறப்பித்துள்ளார்.
