/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பீச் வாலிபால் போட்டியில் வென்ற வீராங்கனைகளுக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து

ADDED : ஜூன் 05, 2025 07:34 AM

புதுச்சேரி; கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டியில் 2ம் இடம் பிடித்து பதக்கம் வென்ற வீராங்கனைகள் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
குஜராத் மாநிலம் டையூவில் கடந்த 19 முதல் 24ம் தேதி வரை கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டிகள் நடந்தது. இதில், பல்வேறு மாநில வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட்டினர்.
அதில், புதுச்சேரி அணி சார்பில் காரைக்கால், நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியை சேர்ந்த வீராங்கனைகள் சசிகலா மற்றும் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், அப்போட்டியில் இரண்டாம் இடமும் பிடித்து, வெள்ளி பதக்கம் மற்றும் கோப்பை வென்றனர். இதையடுத்து, பரிசு பெற்ற வீராங்கனைகள் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., சந்திர பிரியங்காவை, அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.