தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி தற்காலிக சபாநாயகர் கோரிக்கை

எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி தற்காலிக சபாநாயகர் கோரிக்கை

எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி தற்காலிக சபாநாயகர் கோரிக்கை


UPDATED : நவ 24, 2026 04:30 PM

ADDED : நவ 24, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 04:30 PM ADDED : நவ 24, 2026 04:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, அவர், முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனு;

சட்டசபை தேர்தலுக்கு பின், தங்கள் தலைமையில் புதிய அரசு அமைந்து 7 மாத காலம் ஆகிறது. புதிய எம்.எல்.ஏ., க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும், சாலைகள், கழிவு நீர் வாய்க்கால், கழிப்பறைகள், அங்கன்வாடி கட்டடங்கள், குளம் மற்றும் நீர்நிலைகள் சீரமைத்தல் போன்ற அத்தியாவசிய பணிகளை, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யப்படுகிறது.

கடந்த ஆட்சியில், 2 கோடி ரூபாயாக இருந்த எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை, தாங்கள் 3 கோடி ரூபாயாக உயர்த்தி பட்ஜெட்டில் அறிவித்தீர்கள். மேம்பாட்டு நிதியை செயல்படுத்த தாங்கள் அனுமதி அளித்து பல நாட்கள் ஆகியும், நிதி துறையின் திட்டமிட்ட அலட்சியமான கால தாமதத்தினால், எம்.எல்.ஏக்கள், எந்த விதமான பணிகளையும் செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, மக்களின் நலன் கருதி உடனடியாக எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர, உள்ளாட்சி, நிதித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலர் உள்ளிட்ட கொண்ட உயர்மட்ட கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us