வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 12, 2026 06:23 PM

அ நிறம் | அளவு
பாகூர்: சோரியாங்குப்பத்தில் 9.64 லட்சம் ரூபாய் செலவில், வாய்க்கால் துார் வாரும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட சோரியாங்குப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாங்கள் வாய்க்காலை 8.50 லட்சம் ரூபாய் மற்றும் சொர்ணவாரி வாய்க்காலை 1.14 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரி ஆழப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து வாய்க்கால் துார்வாரும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கிராம திட்ட ஊழியர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
