/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் கால்நடை கண்காட்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
காரைக்காலில் கால்நடை கண்காட்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
காரைக்காலில் கால்நடை கண்காட்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
காரைக்காலில் கால்நடை கண்காட்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 28, 2025 01:54 AM
காரைக்கால்: காரைக்காலில் கால்நடைத்துறை சார்பில் கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சியை நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை சார்பில் திருப்பட்டினம் கால்நடை மருத்துவ மருந்தகத்தில் நேற்று முன்தினம்  கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சியை  எம்.எல்.ஏ., நாகதியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து துவக்கி வைத்தார்.
கண்காட்சியில்  125 மாடுகள் 85 கிடாரிகள்  மற்றும் 150 கோழி வகைகள் இடம்பெற்றனர்.
கால்நடை வளர்ப்போவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டத்தில் இதுபோன்ற கண்காட்சி மூன்றாவது முறையாக கால்நடை துறை சார்பில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறந்த கால்நடைகளுக்கான பரிசுகளை எம்.எல்.ஏ., வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குனர் கோபிநாத்.கால்நடை மருத்துவர்கள் சுமதி. சுரேஷ். செந்தில் நாதன் மற்றும் கால்நடை வளர்ப்போர் பங்கேற்றனர்.