/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு நிதி ஆணை; எம்.எல்.ஏ., வழங்கல்
/
வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு நிதி ஆணை; எம்.எல்.ஏ., வழங்கல்
வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு நிதி ஆணை; எம்.எல்.ஏ., வழங்கல்
வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு நிதி ஆணை; எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஜூலை 16, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பாகூர் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தவணை தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, 61 பயனாளிகளுக்கு, இரண்டு மற்றும் மூன்றாவது தவணைகளாக 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரிய முதன்மை செயலர் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் அனில்குமார், இளநிலை பொறியாளர் உதயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.