ADDED : ஜன 24, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பிச்சவீரன்பேட்டில் காலிமனைகளை அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்கக்கோரி சிவசங்கர் எம்.எல்.ஏ., கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:
உழவர்கரை தொகுதி பிச்சவீரன்பேட் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு 59 இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான இடம் அளவீடு செய்து வழங்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே, பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்ட மனை பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர் விரைவில் இடத்தை அளவீடு செய்து வழங்க, அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பீச்சவீரன்பேட் பகுதி மக்கள் உடனிருந்தனர்.

