/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க முதல்வரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க முதல்வரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை
பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க முதல்வரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை
பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க முதல்வரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மே 31, 2025 05:08 AM

புதுச்சேரி: பள்ளிகளை கோடை விடுமுறை முடித்து, ஜூன் 15ம் தேதிக்கு பிறகு திறக்க வேண்டுமென முதல்வர் ரங்கசாமியிடம், நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி திறக்கப்படும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடைக்காலம் நடந்து வரும் நிலையில், கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கியதன், காரணமாக வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை கரையை கடந்து விட்டால், காற்றின் ஈரப்பதம் குறைந்து, குளிர்ந்த வானிலை மாறி வெப்பத்தின் அளவு 100 டிகிரிக்கு மேல் செல்லும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் கொரோனா தாக்கமும் பரவலாக அதிகரித்து வருகிறது.
ஆகையால், பள்ளி திறப்பை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்து ஜூன் 15ம் தேதிக்கு மேல் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.