/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவரை தாக்கி மொபைல் போன் 'அபேஸ்'
/
முதியவரை தாக்கி மொபைல் போன் 'அபேஸ்'
ADDED : பிப் 26, 2024 05:00 AM
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்.கடலுார் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர், தான் கொண்டு வந்த திருட்டு மொபைலை சரிசெய்ய கூறினார். தனக்கு தெரியாது என கூறிய அருண்னின் தந்தையிடம் தகராறு செய்து சர்வீசுக்கு வந்த 3 மொபைல் போன்களை எடுத்து கொண்டு, தான் கொண்டுவந்த போனை கடையில் விட்டு சென்றார்.
இது குறித்து அருண் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.மர்ம நபர் கடையில் விட்டுசென்ற போன், போலீசார் முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.பட்ட பகலில் கடைக்குள் புகுந்து 3 மொபைல்போன் பறித்து சென்ற சம்பவம்அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

