/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கீழே கிடந்த மொபைல் போன்; போலீசில் ஒப்படைப்பு
/
கீழே கிடந்த மொபைல் போன்; போலீசில் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 02, 2025 02:08 AM

புதுச்சேரி : கடற்கரையில் கீழே கிடந்த விலை உயர்த்த மொபைல் போனை சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தவருக்கு, போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி, கொம்பாக்கத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 43; ஜான்குமார் எம்.எல்.ஏ., கார் டிரைவர். இவர் நேற்று காலை புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது, யாரோ ஒருவர் தவற விட்டு சென்ற 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன் கீழே கிடந்துள்ளது.
இதைகண்ட பெரியசாமி, மொபைல் போனை எடுத்து வந்து சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்து, உரியவரிடம் ஒப்படைக்கும் படி கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரின் நேர்மையை பாராட்டி, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் பெரியசாமிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.