காரைக்கால் தொழிலாளியிடம் ரூ.9.66 லட்சம் ஆன்லைன் மோடி
காரைக்கால் தொழிலாளியிடம் ரூ.9.66 லட்சம் ஆன்லைன் மோடி
ADDED : செப் 29, 2026 03:51 PM
காரைக்கால்: காரைக்காலில் சமையல் தொழிலாளியிடம் ரூ.9.66 லட்சம் ஆன்லையன் மூலம் மொசடி செய்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் திருநள்ளாறு சுப்ராயபுரம் பள்ளித் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன்,41; சமையல் தொழிலாளி . இவர் தனியார் நிதி நிறுவனத்தின் இணையதளம் மூலம் ஆன்லைன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மூலம் அதில் கூறப்பட்ட வழிமுறைகளின்படி வெங்கடேசன் பல்வேறு பணம் பரி வர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.9,66 லட்த்தா முதலீடு செய்துள்ளார். இதன் பிறகு அவர் முதலீடு செய்ததற்கான லாபம் மற்றும் அசல் தொகை திரும்பப்பெறமுடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வெங்கடேசன் அதிர்ச்சியடைந்தார்.
வெங்கடேசன் புகாரின் பேரில் திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் பிரவீன், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்குப் பதிந்து, பணப்பரிவர்த்தனைகள் பயன்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
