/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.பி.எல் 2., கிரிக்கெட் போட்டி மோகித் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
/
பி.பி.எல் 2., கிரிக்கெட் போட்டி மோகித் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
பி.பி.எல் 2., கிரிக்கெட் போட்டி மோகித் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
பி.பி.எல் 2., கிரிக்கெட் போட்டி மோகித் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
ADDED : ஜூலை 29, 2025 07:31 AM

வில்லியனுார் :  பி.பி.எல் 2., கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் கடந்த 6ம் தேதி முதல் 27 ம் தேதி வரையில் இரவு பகல் ஆட்டங்களாக நடந்தது. நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிப் போட்டியில் வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணியும், மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதியது.
முதலில் விளையாடிய மாகி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அஜய் ரொஹேரா 17(12), அஹில் கச்ரு 22(18), ராகவன் 25(19), கமலீஷ்வரன் 20(27) மற்றும் ஸ்ரீகரண் 32(27) ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடி வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி 15:1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் மொகித் காலே 35(20), பானுஆனந்த் 35(28), அமன்கான் 17(10) மற்றும் வீரர் ஆகாஷ் 39(27) ரன்கள் எடுத்தனர். வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி வீரர் ஆகாஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்றது குறித்து வில்லியனுார் கிங்ஸ் அணி கேப்டன் ரோஹித் கூறியதவாது: இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது மறக்க முடியாத நிகழ்வாகும். எங்கள் அணியின் பேட்ஸ் மேன்களும், பந்து வீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றிக் கோப்பையை பாண்டிச்சேரி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சமர்பிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

