ADDED : ஆக 27, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில், அன்னை தெரசா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பாரதி பூங்காவில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், ஜான்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்., சார்பில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் கவுன்சிலர் குமரன், வழக்கறிஞர் மாநில தலைவர் மருதுபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.