நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்; காரைக்காலில் காய்கறி தோட்டத்தில் இருந்த நீர் மோட்டரை திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் மதகடி அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன்.
இவர் தலத்தெரு ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான நெடுங்காடு திருவேங்கடபுரம் பகுதியில் உள்ள நிலத்தை பராமரித்து வருகிறார்.தோட்டத்தில் பல்வேறு மரங்கள் மற்றும் காய்கறிகளை பயிர்செய்து வருகிறார்.
கடந்த 19ம் தேதி தோட்டத்தில் உள்ள மோட்டார் கொட்டகையின் கதவு உடைக்கப்பட்டு ரூ.10ஆயிரம் மதிப்புள்ள நீர் மோட்டார் திருடிசென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.