UPDATED : செப் 07, 2026 11:15 PM
ADDED : செப் 07, 2026 11:15 PM
புதுச்சேரி: ராஜிவ் சிக்னல் அருகே கழிவுநீர் வாய்க்காலில் அடிக்கடி சிலாப் சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி ராஜிவ் சிக்னலை கடந்த தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. சிக்னலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் ஜிப்மருக்கு செல்லும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றன. ஓட்டல் அக்கார்டு அருகில் வழுதாவூர் நோக்கி செல்லும் வளைவில் கழிவுநீர் வாய்க்காலில் அடிக்கடி சிலாப் உடைந்து, சேதமடைந்து வருகிறது.
இதனால், திண்டினம், வழுதாவூர் மார்க்கம் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாய்க்காலில் இருப்பு கம்பிகள் அமைத்தும், வானங்கள் செல்லும் போது, சேதமடைந்து பள்ளமாக உள்ளது.
இந்த பிரச்னை தொடர் கதையாக இருப்பதால், பொதுப்பணித்துறையினர் சீர் செய்து தரமான சிலாப்பை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
