/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தமிழ் கூடல் இல்லத்தில் கற்க கசடற கல்வி நிகழ்ச்சி
/
முத்தமிழ் கூடல் இல்லத்தில் கற்க கசடற கல்வி நிகழ்ச்சி
முத்தமிழ் கூடல் இல்லத்தில் கற்க கசடற கல்வி நிகழ்ச்சி
முத்தமிழ் கூடல் இல்லத்தில் கற்க கசடற கல்வி நிகழ்ச்சி
ADDED : ஜன 28, 2026 05:36 AM

பாகூர்: சோரியங்குப்பம் முத்தமிழ் கூடல் இல்லத்தில், மாணவர்களுக்கான, கற்க கசடற கல்வி நிகழ்ச்சி நடந்தது.
பு துச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
மண்டல அமைப்பாளர் முரசொலிமாறன் வரவேற்றார். புதுச்சேரி சங்க நிறுவனர் செல்வி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் விஜயலட்சுமி வாழ்த்தி பேசினார். கல்வியின் அவசியம் குறித்து மாணவிகள் ராஜஸ்ரீ, வர்ஷினி, ஷிவானி, சண்முகப்பிரியா ஆகியோர் நோக்கவுரையாற்றினர்.
வாழ்க்கைக் கல்வி என்னும் தலைப்பில் மாணவர்கள் பாலமுருகன், சுஜானா, சமித்நிமோ, ஸ்ரீராம் கருத்துரையாற்றினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
மண்டல அமைப்பாளர் மாதவி நன்றி கூறினார்.