/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமெடி நடிகர் போல் பேசும் நாராயணசாமி அ.தி.மு.க., அன்பழகன் கிண்டல்
/
காமெடி நடிகர் போல் பேசும் நாராயணசாமி அ.தி.மு.க., அன்பழகன் கிண்டல்
காமெடி நடிகர் போல் பேசும் நாராயணசாமி அ.தி.மு.க., அன்பழகன் கிண்டல்
காமெடி நடிகர் போல் பேசும் நாராயணசாமி அ.தி.மு.க., அன்பழகன் கிண்டல்
ADDED : ஜூன் 08, 2025 10:14 PM
புதுச்சேரி: நிதி கசிவை தடுத்தி நிறுத்தினால் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வர் அறிவித்த பல திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு போதிய கூடுதல் நிதி வருவாய் அவசியம் தேவை. தற்போதைய கலால்துறை கொள்கையில் சிறு மாற்றம் கொண்டு வந்து கொள்முதல் மற்றும் விநியோகத்தை அரசே செயல்படுத்தினால் ரூ.750 கோடிக்கு மேல் வருமானம் உயரும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரி மாநிலத்தில் நில மதிப்பீடு உயர்த்தப்படவில்லை. இதனால், பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. பத்திரப்பதிவு துறை, கலால்துறை, போக்குவரத்து துறை, விற்பனை வரித்துறை ஆகியவற்றில் ஏற்படும் நிதி கசிவை நேர்மையான வழியில் தடுத்து முறைப்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.1,250 கேடிக்கு மேல் கூடுதல் வருவாய் வரும். பல திட்டங்களை செயல்படுத்த முடியும். இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி காங்., கட்சிக்கு வந்தால் நாங்கள் சேர்த்துக்கொள்ளமாட்டோம் என சகட்டுமேனிக்கு தமாஷ் நடிகர் போல் பேசியுள்ளார்.
வேறு கட்சி ஆரம்பித்து மாநிலத்தின் முதல்வர் உள்ளவர் எப்போது காங்., கட்சிக்கு வருவதாக கூறினார் என்பதை நாராயணசாமி தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் காங்., கட்சியில் இருந்து நாராயணசாமி வேறு கட்சிக்கு போய்விட வேண்டும்' என்றார்.