/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கைவினை கலைஞருக்கு தேசிய விருது அறிவிப்பு
/
புதுச்சேரி கைவினை கலைஞருக்கு தேசிய விருது அறிவிப்பு
புதுச்சேரி கைவினை கலைஞருக்கு தேசிய விருது அறிவிப்பு
புதுச்சேரி கைவினை கலைஞருக்கு தேசிய விருது அறிவிப்பு
ADDED : அக் 20, 2025 12:02 AM

புதுச்சேரி: புதுச்சேரி கைவினை கலைஞருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட் டுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கைவினை கலைஞர் மோகன்தாஸ், 48; இவருக்கு மத்திய கைவினை பொருள் அவிருத்தி ஆணையத்தின் 2024-25ம் ஆண்டிற்கான கைவினை கலைஞர்களுக்கான தேசிய விருது தற்போது அறிவிக்கப்பட் டுள்ளது.
டிசம்பர் 9 ம்தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் இந்த விருதும், பரிசும் அவருக்கு வழங்கப்பட உள்ளது.
காகித கூழ் பிரிவில் அவர் அனுப்பிய கிருஷ்ணரின் தச அவதாரம் பொம்மை தான், இந்த விருதினை அவருக்கு பெற்று தந்துள்ளது. பேப்பர் கூழில் பொம்மைகள் செய்து, அதற்கு இயற்கை வண்ணங்கள் பூசி, அதன் பிறகு வண்ணம் தீட்டி அழகிய பொம்மைகளை உருவாக்கி வருகிறார்.
விருது கிடைத்தது குறித்து, மோகஸ்தாஸ் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளாக காகித கூழ் பொம்மை செய்து வருகிறேன். இதுதான் எனது தொழில், உயிர் மூச்சும் இது தான். எனது தொழிலை அங்கீகரித்து மணி மகுடமாக மத்திய அரசு தேசிய விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த தொழிலில் பல சவால்கள் உள்ளன. காகித பொம்மைகளுக்கு மூலப்பொருளே உறுதியான காகிதங்கள் தான். சில நேரங்களில் காகித கூழ் உருவாக்குவதற்காக காகிதங்கள் அவ்வளவாக கிடைக்காது.
முன்பெல்லாம் சிமெண்ட் பேப்பர் கிடைக்கும். இப்போது புதுச்சேரியில் சிமெண்ட் பேப்பர் கிடைப்பதே இல்லை. ஆந்திரா வரை சென்று வாங்கி வந்து பொம்மைகளை உருவாக்கி வருகிறோம். புதுச்சேரியில் சிமெண்ட் பேப்பர்கள் கிடைக்கும்போது 15 ரூபாய் தான் செலவானது. இப்போது 50 ரூபாய் வரை கிலோவிற்கு கொடுத்து வாங்கி வந்து காகித கூழ் பொம்மைகளை வடிவமைத்து வருகிறோம் என்றார்.
மறைந்து வரும் பாரம்ப யத்தை உயிரோட்டத்துடன் பேணுவதுடன், தேசிய விருதினையும் பெற உள்ள மோகன்தாசுக்கு ஒரு சபாஷ் போடு வோம்.