/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய ஹாக்கி போட்டி: குருவிநத்தம் அணி அசத்தல்
/
தேசிய ஹாக்கி போட்டி: குருவிநத்தம் அணி அசத்தல்
ADDED : ஜன 01, 2026 05:36 AM

பாகூர்: தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில், குருவிநத்தம் ஹாக்கி அணி 4ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மதுரை வாடிப்பட்டியில், ராஜா ஹாக்கி அகாடமி, எவர்கிரேட் ஹாக்கி கிளப் சார்பில், ராஜூ, வீராசாமி நினைவாக 'ஏ.ஆர்.எஸ்., டிராபி 2025' தேசிய அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 25ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடந்தது.
லீக் மற்றும் நாக் -அவுட் முறையில் நடந்த இப்போட்டியில், தமிழகம், கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்றன. இதில், புதுச்சேரி குருவிநத்தம் ஹாக்கி அணி 4ம் இடம் பிடித்து, சுழல்கோப்பை மற்றும் ரொக்கப் பரிசை வென்றது.
தேசிய அளவிலான போட்டியில் 4ம் இடம் பிடித்து சாதனை படைத்த குருவிநத்தம் ஹாக்கி அணி வீரர்கள், அருண்குமார், அருள், பரதன், சூர்யா, குருமூர்த்தி, ஆகாஷ், மோகன், அன்பு, விஷ்வா, தர்ஷன், இளமாறன், பிரேம்குமார், பாலா, வெங்கட், ராஜ்குமார், மோகன், கார்த்தி, அதிபதி ஆகியோர், வெற்றி கோப்பையுடன், பாகூர் எம்.எல்.ஏ., செந்தில்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

