/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: புதுச்சேரி வீரர் சாம்பியன்
/
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: புதுச்சேரி வீரர் சாம்பியன்
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: புதுச்சேரி வீரர் சாம்பியன்
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: புதுச்சேரி வீரர் சாம்பியன்
ADDED : ஜன 01, 2026 05:35 AM

வில்லியனுார்: புதுடில்லியில் நடந்த தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் புதுச்சேரி வீரர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
புதுடில்லியில் 68வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடந்த இப்போட்டியில், புதுச்சேரி சுப்பாக்கி சுடும் சங்கம் சார்பில் ஆண்கள் பிரிவில், மின்துறை ஊழியர் திருக்குமரன் பங்கேற்றார்.
போட்டியில், அவர் சிறப்பாக செயல்பட்டு 'ரினோவுன் ஷாட்டர்' என்ற அந்தஸ்துடன் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று, புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய போட்டியில் வெற்றி பெற்று புதுச்சேரி திரும்பிய திருக்குமரனுக்கு, மின் துறை அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி துப்பாக்கி சுடும் சங்க நிர்வாகிகள் பாராட்டி, வாழ்த்தினர்.