/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவிலான இசைப் போட்டி அமலோற்பவம் பள்ளிக்கு பதக்கம்
/
தேசிய அளவிலான இசைப் போட்டி அமலோற்பவம் பள்ளிக்கு பதக்கம்
தேசிய அளவிலான இசைப் போட்டி அமலோற்பவம் பள்ளிக்கு பதக்கம்
தேசிய அளவிலான இசைப் போட்டி அமலோற்பவம் பள்ளிக்கு பதக்கம்
ADDED : பிப் 05, 2024 04:13 AM

புதுச்சேரி : தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பேண்டு வாத்திய இசைப்போட்டியில் அமலோற்பவம் பள்ளி இசைக்குழுவினர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுடில்லி மேஜர் தயான்சந்த் மைதானத்தில் தேசியப் பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சகம் சார்பில் தேசிய பள்ளி பேண்டு வாத்திய இசை போட்டி நடந்தது.
நாடு முழுவதும் இருந்து 486 அணிகளைச் சார்ந்த 12,857 மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் அமலோற்பவம் பள்ளியின் சார்பில் பங்கேற்ற 26 பேர் கொண்ட இசைக்குழுவினர் பிராஸ் பேண்டு இசைப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் வென்று அசத்தினர்.
வெகுமதியாக ரூ.16,000 ரொக்க பரிசையும் வெள்ளி பதக்கத்தை பெற்றனர்.
இம்மாணவர்கள் இதற்கு முன் மாநில அளவில் நடைபெற்ற இசைப் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியிருந்தனர்.
தேசிய அளவில் சாதனை படைத்த வெற்றியாளர்களுக்கான ரொக்கப் பரிசு, கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு இயக்கச் செயலாளர் சஞ்சய்குமார் வழங்கி பாராட்டினார்.
தேசிய இசைப்போட்டிக்கான விருதை வென்ற அமலோற்பவம் பள்ளி மாணவர்களை பள்ளி நிறுவனர் லூர்துசாமி பாராட்டினார். விருது பெற காரணமாக இருந்த 26 மாணவர்களுக்கும் தலா 10 கிராம் வெள்ளிக் காசினைப் பள்ளிச் சார்பாக வழங்கினார்.

