/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவிலான திறன் சார்ந்த போட்டிகள்
/
தேசிய அளவிலான திறன் சார்ந்த போட்டிகள்
ADDED : மார் 19, 2025 05:39 AM

புதுச்சேரி, : புதுச்சேரி, சாரதா கங்காதரன் கல்லுாரியின், மேலாண்மை துறை சார்பில் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான தேசிய அளவிலான திறன் சார்ந்த போட்டிகள் 'பிஸ் போர்டிட்டியூட்' நடந்தது.
மேலாண்மை துறைத் தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார். கல்லுாரியின் துணைத் தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை துறைப் பேராசிரியர் காசிலிங்கம் போட்டிகளை துவக்கி வைத்தார்.
ஹை டிசைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைமை நிதி அதிகாரி பூஜாஸ்படா பாண்டப் சிறப்புரையாற்றினார். கல்லுாரியின் முதல்வர் பாபு வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களை சார்ந்த 450 மாணவ, மாணவிகளுக்கு போட்டிகளில் பங்கேற்றனர்.
இப்போட்டியில், ஆரோ இன்னோவேஷன்ஸ் பவுண்டர் கான் பரேக், ஏர் மோட்டார்ஸ் மற்றும் டோனி அண்ட் கை, இயக்குநர் இந்திரா ரவிச்சந்திரன், ஹாஸ் அகாடமி பூரணி ஆகியோர் தகுதியான மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர்.
கார்ப்பரேட் வாக், பெஸ்ட் மேனேஜ்மென்ட், போஸ்டர் பிரசன்டேஷன் மற்றும் போட்டோகிராபி போன்ற போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், இதயா மகளிர் கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.