/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய டேக்வாண்டோ போட்டி வரும் 3ம் தேதி வீரர்கள் தேர்வு
/
தேசிய டேக்வாண்டோ போட்டி வரும் 3ம் தேதி வீரர்கள் தேர்வு
தேசிய டேக்வாண்டோ போட்டி வரும் 3ம் தேதி வீரர்கள் தேர்வு
தேசிய டேக்வாண்டோ போட்டி வரும் 3ம் தேதி வீரர்கள் தேர்வு
ADDED : ஜூலை 30, 2025 11:37 PM
புதுச்சேரி:சீனியர் தேசிய டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி வீரர்கள் தேர்வு வரும் 3ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து புதுச்சேரி ஒலிம்பியன் டேக்வாண்டோ சங்க செயலாளர் தினேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய அரசு விளையாட்டு துறையால் அங்கீகாரம் பெற்ற தேக்வாண்டோ சம்மேளனம் சார்பில் 4வது தேசிய சீனியர் டேக்வாண்டோ போட்டி அரியானா மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து டேக்வாண்டோ வீரர், வீராங்கனைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்பதற்கான வீரர்கள் தேர்வு வரும் 3ம் தேதி புதுச்சேரி இந்திராகாந்தி விளயாட்டரங்கில் நடக்கிறது.
இத்தேர்வில் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களை சேர்ந்த இந்திய டேக்வாண்டோவில் உறுப்பினர் பதிவு எண் வைத்துள்ளவர்கள் பங்கேற்கலாம். தேர்வில் பங்கேற்க விரும்புவோர் நாளை 1ம் தேதிக்குள் தங்கள் பெயரை சங்க அலுவலகத்தில் அல்லது 74486 52338, 0413- 2353717 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

