ADDED : அக் 13, 2025 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித்திட்ட முகாமில், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
பு துச்சேரி பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்க நிகழ்ச்சி, துவங்கியது. முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி எமில் முகாமை துவக்கி வைத்தார்.
16ம் தேதி வரை, முகாம் நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், இலவச பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாம், ஏற்பாடுகளை, பேட்ரிக் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆரோன் செய்து வருகிறார்.