ADDED : அக் 07, 2025 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரி ரம்யம் நடன பள்ளி சார்பில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்தது.
நவராத்திரி மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், பள்ளியின் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புஷ்பாஞ்சலி நாட்டியம், காளி கவுத்துவம், கணேஷா கவுத்துவம் நடனமாடினர். ஏற்பாடுகளை ரம்யம் நடன பள்ளியின் குரு ரம்யா மோகன் செய்திருந்தார்.