/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தலில் நேரு போட்டி? ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை
/
லோக்சபா தேர்தலில் நேரு போட்டி? ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை
லோக்சபா தேர்தலில் நேரு போட்டி? ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை
லோக்சபா தேர்தலில் நேரு போட்டி? ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை
ADDED : மார் 16, 2024 11:13 PM
லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
உருளையன்பேட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நேரு எம்.எல்.ஏ., மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு பொது பிரச்னைகள் தொடர்பாக குரல் கொடுத்து வரும் அவர், நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள், பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் இன்று 17ம் தேதி காலை அண்ணாசாலையில் உள்ள அபிராமி ரெசிடென்சியில் ஆலோசனை நடத்தி அறிவிக்க உள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டில் முதல் முதலாக உருளையன்பேட்டையில் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் நிற்க நேருவிற்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால், திடீரென கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றத்தை தொடர்ந்து சுயேட்சையாக அத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தொடர்ந்து 2011ம் ஆண்டு தேர்தலில் என்.ஆர்., காங்.,-அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அரசு கொறடாவாகவும் பதவி வகித்தார். 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.,விற்கு ஆதரவு இல்லை; என்.ஆர் காங்., கட்சிக்கு மட்டும் ஆதரவு என்று அறிவித்து, ஆதரவு கொடுத்து வருகிறார்.
தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் லோக்சபா தேர்தலில் பா.ஜ., நிற்க உள்ள சூழ்நிலையில், நேரு எம்.எல்.ஏ., லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

